Monday 26 September 2011

View Point: View Point: தமிழ் கவிதைகள்

View Point: View Point: தமிழ் கவிதைகள்: View Point: தமிழ் கவிதைகள் : சிந்தனை செருக்கில் எண்ணங்கள் குவியலாக அவற்றை வடிக்க வார்த்தைகள் தேடி னேன் பல மொ ழிகளில் தஞ்சமடைந்தேன் தமிழை...

View Point: தமிழ் கவிதைகள்

View Point: தமிழ் கவிதைகள்: சிந்தனை செருக்கில் எண்ணங்கள் குவியலாக அவற்றை வடிக்க வார்த்தைகள் தேடி னேன் பல மொ ழிகளில் தஞ்சமடைந்தேன் தமிழை . தமிழ்பாவலர் பாரதிதாசனுக்...

View Point: எங்கும் நிலவும் நிலவு

View Point: எங்கும் நிலவும் நிலவு: என் மழலை பருவம் கண்டெடுத்த நிலவே முதுமையிலும் என்னுள் உலவி நிலவுகிறாய் காலத்தில் எங்கெங்கு செல்லினும் உடனிருந்து உள்ளமதை கொள்ளை கொள்கிறாய் ...

View Point: எங்கும் நிலவும் நிலவு

View Point: எங்கும் நிலவும் நிலவு: என் மழலை பருவம் கண்டெடுத்த நிலவே முதுமையிலும் என்னுள் உலவி நிலவுகிறாய் காலத்தில் எங்கெங்கு செல்லினும் உடனிருந்து உள்ளமதை கொள்ளை கொள்கிறாய் ...

Sunday 25 September 2011

View Point: வாழ்வின் நிதர்சனம்

View Point: வாழ்வின் நிதர்சனம்: எண்ணங்களின் நெரிசலில் மனம் என்ற வாகனம் ஓட போதுமான நிறுத்தம் இல்லாது போக ...

View Point: வாழ்வின் நிதர்சனம்

View Point: வாழ்வின் நிதர்சனம்: எண்ணங்களின் நெரிசலில் மனம் என்ற வாகனம் ஓட போதுமான நிறுத்தம் இல்லாது போக ...

View Point: அவள் அவளாகவே...

View Point: அவள் அவளாகவே...: அவள் நினைத்தால் சாதிப்பது எத்தனையோ அவள் வெறுத்தால் அங்குலம் பெயராது  அவள் ஆசை அதிகமெனில் நன்சொல் தவிர்ப்பாள் விடும்...

View Point: பக்தியில் கரையும் லஞ்சம்

View Point: பக்தியில் கரையும் லஞ்சம்: View Point: View Point: Corruption dissolves in worship at te... : View Point: Corruption dissolves in worship at temples : கோயில் உண்டியல...

View Point: தாலாட்டு ஒப்பு தரம் பார்த்து வை.

View Point: தாலாட்டு ஒப்பு தரம் பார்த்து வை.: இந்த மதுரை மண்ணில் நான் திருமணமாகி வந்த பொழுதில் இங்குள்ள கிராமங்களில் பேசப்படும் சில சிலேடை மொழிகள் புதிதாகவும் ,புரியாததனமாகவும் இருக்கும...

View Point: ராஜபாட்டை

View Point: ராஜபாட்டை: ராஜபாட்டை என்பது அந்நாளில் அரசன் தனது அமைச்சு, படை பரிவாரங்களுடன் பவனி வரும் வீதி. இன்று மன்னராட்சி இல்லை ,ஆனால் ஜனநாயக அரசில் எல்லோரும் இந...

View Point: எங்கும் நிலவும் நிலவு

View Point: எங்கும் நிலவும் நிலவு: என் மழலை பருவம் கண்டெடுத்த நிலவே முதுமையிலும் என்னுள் உலவி நிலவுகிறாய் காலத்தில் எங்கெங்கு செல்லினும் உடனிருந்து உள்ளமதை கொள்ளை கொள்கிறாய் ...

எங்கும் நிலவும் நிலவு

என் மழலை பருவம் கண்டெடுத்த நிலவே
முதுமையிலும் என்னுள் உலவி நிலவுகிறாய்
காலத்தில் எங்கெங்கு செல்லினும் 
உடனிருந்து உள்ளமதை கொள்ளை கொள்கிறாய்
வியந்த நாள் பல உண்டு ,மயங்குகிறேன் மதிகெட்டு  
நீரும் நிலமும் நீள் பரப்பில் மாறினும்  
மாறி வரும் உன் அழகை பங்கிடும் வேளையில்
பிரபஞ்சமே 'உன் அடிமை எனச்சொல்லவோ
விரிகடல் உன் கைவிரலில் தவழும் பாங்கென்ன 
ஏறிவரும் நிலமதில் நீ எழுதிடும் கோலங்கள் எத்தனை 
 விண்  முட்டும் மலைதன்னை நீ முத்தமிட்டால்
ஓடி வருமோ இல்லை கூட வருமோ மேக நண்பர்கள்.
அந்த ஒரு தலைவன் கீழ வாசல்காரன் வரும் வரை
நீவிர் நடத்தும் நாடகங்கள் எத்தனை
பஞ்ச பூதத்தில் நெருப்பொன்றே உன்னிடம் வாரா 
அதனால் தானோ குளுமை உன் சொந்தமானது   
ஏனையர் உன் பார்வை பட்டு வர்ணம் பல கொண்டு
போடும் ஆட்டங்கள்தான் எத்தனை, எத்தனை
சலிக்காது மனங்கள் களிக்க வைக்கிறாய்
காலமெல்லாம் உழன்ற எரிசக்தியிலிருந்து மீள
நிழளொளி தரும் நிலவொளி நீ ஒரு சாந்த தீபம்
அமைதி தரும் தனிமை உனது
நிம்மதி தேடும் மனமோ எனது
வியாகூலங்கள் நான் சொல்லியே செல்வேன்
தலைமுறைக்கும் அது எஞ்சியே நிற்கும்
பங்கமுள்ள உன் முகப்பாங்கினும்   
பாங்காய் எங்கள் பார்வை உன் மேல் விழுகிறதே
மாயம் உன்னிடம் இல்லை
ஆகாய வழி செல்லும் நிலவே
நீ கற்பனை அல்லவே 
நீக்கமற எங்கும் எந்நாளும்
நிலவும் நிலவே நீதானே ..!  



  கோதைதனபாலன்
 எங்கள் நிலா முற்றம் 





நான்  மாறலாம் 
   இந்த நிலவு மாறுமோ 

நாம் அழிந்துபடலாம்
   இந்த நிலவு அழிவதுண்டோ 

அன்றைக்கும் அதே நிலவுதான் 
   இன்றைக்கும் அதே நிலவுதான் 

என்றைக்கும் ஒரே நிலவாய் 
   சொல்லிடுமே சேதி பல கோடி


             







பக்தியில் கரையும் லஞ்சம்

View Point: View Point: Corruption dissolves in worship at te...: View Point: Corruption dissolves in worship at temples : கோயில் உண்டியலில் இடும் காணிக்கை தெய்வத்திற்கு லஞ்சமன்று கோயிலுக்கு நமது வர...

Saturday 24 September 2011

ராஜபாட்டை

ராஜபாட்டை என்பது அந்நாளில் அரசன் தனது அமைச்சு, படை  பரிவாரங்களுடன் பவனி வரும் வீதி. இன்று மன்னராட்சி இல்லை ,ஆனால் ஜனநாயக அரசில் எல்லோரும் இந்நாட்டு மன்னரே . ஆக நமக்கென்று போட்டிருக்கும் ராஜபாட்டை தான் புதிய தேசிய நெடுஞ்சாலைகள்,.. சுதந்திர இந்தியாவில் ஒன்றே போன்று நாம் மகிழும் ஒரே அம்சம்..  வியக்காமல் இருக்க முடியவில்லை.  பட்டணம் சேர ஒரு நாள் ஆகும் என்று காத்திருந்து சாப்பாட்டு மூ ட்டையுடன் லோலோ என்று போய் இறங்கும் காலம் போயிற்று. . இரவு உறக்கம் போச்சு, பகல் வேலைகள் விட்டுப் போயிற்று என்றெல்லாம் சொல்லத் தேவை இல்லை. நினைத்த நேரத்தில் ,அதுவும் சொந்தவண்டி என்றால் கேட்கவே வேண்டாம். சல்  என்று கிளம்பி பயணிக்க   முடிகிறது. பெட்ரோல்,உணவகம் ,இளைப்பாறும் இடவசதி வேண்டும் தூரத்தில் கிடைக்கும் பாங்கை அனுபவிக்க முடிகிறது.    நாலு வழிச்சாலையில் போகப் போக எங்கேயோ மிதந்து போவது போன்றுதான் தோன்றுகிறது.பயணக் களைப்பு தெரிவதில்லை.  முன்னம் அடுத்தடுத்த ஊர் வருகையில் ஏற்படக்கூடிய நெரிசல்  தவிர்க்கப் பட்டுவிட்டன. நெடு தூரம் பயணிக்கையில் எந்த ஊர்களுமே கண்ணில் படுவதில்லை. அன்றைக்கு இடப்புறம் பார்த்தவை எல்லாம் வலப்புறம் மாறித் தெரிகிறது. வலப்புறம்  இருந்தவை இடப்புறமாய் வருகிறது.  ஆனால் பயணிக்கும் நேரம் பெரிதும் சுருக்கப் பட்டுவிட்டது. 
  சமீப காலம் வரை மாநிலசிறிய  சாலைகளில் அந்தந்த கிராமங்களுக்கு பிரியும் சாலைப்பகுதியை விலக்கு   என்று சொல்வர். இது போன்றே தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிய பெரிய ஊர்களுக்கு பல விலக்கு பாதைகள் நிர்மாணித்துள்ளனர். பலகைகளில் எழுதி குறியீடும் காண்பித்துள்ளனர். ஓட்டுனர்கள் சும்மா  ஸ்டீரிங்கை பிடித்து வந்தாலே போதும் .... கவனம் அதிகம் செலுத்த முடியாத பொழுதில் தூக்கம் வருவதை தவிர்த்துக் கொள்வதில் இனி புது கவனம் அவர்கள் செலுத்த வேண்டும்.  
பழைய வழித்தடங்களின் அடையாளங்கள் பெரிய அளவில் விழுங்கப் பட்டுள்ளன.பெரும்பகுதி அடர்வு இல்லாத காட்டு வழியாய் நீள்கின்றது. நிசப்தமே மேலோங்கி நிற்கிறது. இத் திறந்த வெளி நீள்  பயணம் அழகான எடுப்பான சாலைகளில் தொடர எங்கணும் வியாபித்திருக்கும் அழகை பல கோணங்களில் ரசிக்க முடிகிறது.  இரவில் பிரகாசிக்கும் ஸ்டிக்கர்கள் மணிகளின் கோர்வையாய் கண்ணுக்கு தெரிகின்றன. நமது இந்தியாவா..?என்ற மெலிதான அற்புத உணர்வே மிஞ்சுகின்றது.    








kothaidhanabalan 























வகுப்பறை: எதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார்?

வகுப்பறை: எதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார்?

Friday 23 September 2011

View Point: Corruption dissolves in worship at temples

View Point: Corruption dissolves in worship at temples: கோயில் உண்டியலில் இடும் காணிக்கை தெய்வத்திற்கு லஞ்சமன்று கோயிலுக்கு நமது வருமானம் கருவறையில் கால் கடுத்திருக்க ஆராதனை காட்டாது த...

தாலாட்டு ஒப்பு தரம் பார்த்து வை.

இந்த மதுரை மண்ணில் நான் திருமணமாகி வந்த பொழுதில் இங்குள்ள 
கிராமங்களில் பேசப்படும் சில சிலேடை மொழிகள் புதிதாகவும் ,புரியாததனமாகவும் இருக்கும்.அவற்றை பொருள் கொள்ளும் முன்னம் போதும் போதும் என்றாகிடும். எந்த சொல்லுக்கும் நேரடி பதில் கிடையாது.உவமான உவமேயங்களுட தான் பதில் கிடைக்கும்.  ரசிக்கும் படியாகவும் இருக்கும். தம்மிடம் இருக்கும் அல்லது இருப்பதுபோன்று ஒரு பொருளை தங்களுக்கு அடங்கியவர் விரும்பி கேட்டால் சடக்கென்று பேசுவர்,'தாலாட்டு ஒப்பு தரம் பார்த்து வைக்கணும் .யாரிடம் வந்து எதை விரும்பிக் கேட்பது..' என்று கோபிப்பார் . பொதுவாக இம்மக்களின் செயல்பாடுகளில் தந்திர முறைகளே வியாபித்திருக்கும்.அதனால் காரியம் வேண்டி யாரும் ஒருவர் அனுகிவிட்டால் போதும் ,சந்தேகமே மனதில் முன் நிற்கும்.உடனே வரும் வார்த்தைகள் ,'ஆத்த கண்டு ஊத்து இறைக்கணும் ,அம்மியைக் கண்டு மிளகாய் அரைக்கணும்,எங்க வந்து எதனைக் கேக்கறே' என்றுசொல்வர்.வெறும் ஐந்து ருபாய் கிடைத்தால் போதும் உலகமே தங்கள் கையில் இருப்பது போல் பேசும் மக்கள் இன்னமும் உண்டு.அவர்களை உலகப் பெருசு ஒன்பது ருபாய் நோட்டு என்பர் .தகாத சிநேகிதிகளின் திருவிளையாடலுக்கு 'ஒண்ட வந்த பிடாரம் ஊருப்பேயை ஒட்டுச்சாம் ' இது விமர்சனம் . இது போன்ற அடைமொழிகள் எத்தனை எத்தனையோ .இன்று அதை அசை போடத்தான் ஆள் இருக்கிறதே ஒழிய பேசுவார் குறைந்து விட்டனர்.  எல்லாவற்றிலும் இந்த தாலாட்டு ஒப்பு தரம் பார்த்து வை என்பது மட்டும் மனதில் ஒலித்துக்கொண்டே உள்ளது. ஆம் இன்றளவிலும் எல்லாத்துறையிலும் அதை ஒத்து நினைத்து முடிவெடுப்பது நலமாகப் படுகிறது.    குழந்தைக்கு தாலாட்டும் பொழுதே நம் பகுமான உணர்வுக்கு உட்பட்டே கனவு காண வேண்டும் என்பதுதான் அதன் தாத்பரியம். இப்பொழுதும் கல்வி சாலையில் அவரவர் அறிவுத் திறன் பொறுத்து கற்றவர் வீண் போனதில்லை.     தமது  வருமானம் அறிந்து வளம் சேர்க்க ஆசைபடுபவரே வாழ்வில் வென்று நிற்கின்றனர்.  தமக்கு கிடைக்காதது தம் பிள்ளைக்கு கிடைக்கட்டும் என்று பேராசையில் அவர்கள் வென்றாலும் தம் மக்களிடம் வாழ்க்கையில் பெரும்பாலர் தோற்று நிற்பது வெளிப்படையானது. இவற்றை என் மனம் அசைபோட்டு பார்க்கையில் தான் இக்கட்டுரையை எழுதிவிட்டேன்.   

 கோதைதனபாலன்.











  

Saturday 17 September 2011

சிறைப்படுத்தும் நரை

என் சிரிப்பிலும் நரை விழுகிறது ,  
என் வேதனையிலும் அது வளர்கிறது, 
போலித்தனம் புனைய மனம் இல்லை
நான் என்ன செய்ய?  இது என்
தேக்க நிலையா...?தேற்றநிலையா..  ..? 
 
 பகர்வாய் நீ நன் நெஞ்சே.    
      






    கோதைதனபாலன்

Sunday 11 September 2011

Wandering Eyes


Won in the fray and had taken the prey! 
Oh ! you jaded tiger !Are you in blithe? 
The mighty jungle is coming to an end! 
But your wandering eyes are not in ... 



     
by, 
Sivashanmugam    
Karur    

painting by,  
Kothaidhanabalan     

Sunday 4 September 2011

Experiences that split my thoughts.

என்னைப் பொறுத்தவரை அனுபவ முத்திரைகளை ஏட்டில் ஏற்றும் தருணம்  இது என்றே .உணர்ந்து செயலில் இறங்கிவிட்டேன். 'விளையும் பருவம் முளையிலே ' என்று என் பள்ளி ஆசிரியர் அடிக்கடி கூறியது எவ்வளவு உண்மை என்று இப்பொழுது உணர்கிறேன்.இரண்டொரு நிகழ்வுகளை தங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் . 

                      ஆரம்பகாலத்தில் நாங்கள் திருப்பூரில் சிறிது காலம் வாசம் செய்தோம்.அருகிலிருப்பவர் சொந்தமென நன்முறையில் பழகுவோம்..நான் குழந்தைகளிடம் அதிக பிரியமாய் இருப்பதால் அவர்கள் குழந்தைகளும் எங்கள் வீட்டில்தான் விளையாட வருவர்.ஒரு நாள் நாங்கள் நான்கு வயது குழந்தைகட்கு  ஒரு சிறிய விளையாட்டு போட்டி வைத்தோம். வீட்டின் ஜன்னல்கள் கம்பி கிராதியிட்டு சற்று உயரமாய் இருக்கும்.மூன்று குழந்தைகளில் யார் முதலில் ஜன்னல் உயரத்துக்கு ஏறி நிற்பரோ அவருக்கு   கேட்பரிஸ் சாக்லேட் . குழந்தைகள் மளமளவென எத்தனித்து ஏறும் அழகை ரசிக்கலானோம் ;இதில்  ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி உற்சாகப் படுத்துதல் வேறு.  அப்பொழுது தான் ஒரு ஆண் குழந்தை தனக்கு சற்று முன்னே ஏறி நின்றிருந்த பெண் குழந்தை ஒன்றின் கால்களை ஏறவிடாது இழுத்துவிடுவதை அறிந்தோம் .இப்பொழுது நமக்கு எதையும் புரிந்து கொள்ளும் வயதல்லவா ? புரிந்துகொண்டோம் . குழந்தைக்கு  யார் இந்த யோசனையை சொல்வர்? சொன்னாலும் புரிந்து கொள்ளும் வயதா குழந்தைக்கு ? விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம் .இங்கு என் ஆசிரியர் விளையும் பருவம் முளையிலே என்றது இப்பொழுது சரியாகப் புரிந்தது . 

மற்றும் ஒரு பருவம் பற்றியது மறுமுறை வரும். 

வணக்கத்துடன் ,
 கோதைதனபாலன் 






Thursday 1 September 2011

அவள் அவளாகவே...

ரவிவர்மா ஓவியம்







அவள் நினைத்தால் 
 சாதிப்பது   எத்தனையோ
அவள் வெறுத்தால் 
அங்குலம் பெயராது 

அவள் ஆசை அதிகமெனில்
நன்சொல் தவிர்ப்பாள்
விடும் கண்ணீரில் வீழ்வாள்

அவள் அன்பு மிதமிஞ்சின் 
தெரிந்தும் ஏமாறுவாள்


 அடிமை என வாழ்வாள்



அவள் உணர்ச்சி  பிழம்பானால்    
வாழ்க்கை புயலில்
புரண்டெழும் பெண்மணி 




அவள் அடுப்பங்கரையில்
ஒளியின் ஒழித்தாள்
 புதுமை ஆக்க உணர்வுகளை 




அவள் அவ்வுணர்வு காட்டினாள் 
குடும்பத்தார் பாசத்தில்
வட்டத்தில் நின்றிடுவாள்


அவள் பூவுலகில்
ஏட்டிலும் எழுத்திலும் மட்டுமே 
தெய்வப் பெண் !வாழ்வில் சராசரி!  
ஏன்....? ஏன்....?  
அவள் அவளாகவே இருக்கிறாள் .