என்னைப் பொறுத்தவரை அனுபவ முத்திரைகளை ஏட்டில் ஏற்றும் தருணம் இது என்றே .உணர்ந்து செயலில் இறங்கிவிட்டேன். 'விளையும் பருவம் முளையிலே ' என்று என் பள்ளி ஆசிரியர் அடிக்கடி கூறியது எவ்வளவு உண்மை என்று இப்பொழுது உணர்கிறேன்.இரண்டொரு நிகழ்வுகளை தங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் .
ஆரம்பகாலத்தில் நாங்கள் திருப்பூரில் சிறிது காலம் வாசம் செய்தோம்.அருகிலிருப்பவர் சொந்தமென நன்முறையில் பழகுவோம்..நான் குழந்தைகளிடம் அதிக பிரியமாய் இருப்பதால் அவர்கள் குழந்தைகளும் எங்கள் வீட்டில்தான் விளையாட வருவர்.ஒரு நாள் நாங்கள் நான்கு வயது குழந்தைகட்கு ஒரு சிறிய விளையாட்டு போட்டி வைத்தோம். வீட்டின் ஜன்னல்கள் கம்பி கிராதியிட்டு சற்று உயரமாய் இருக்கும்.மூன்று குழந்தைகளில் யார் முதலில் ஜன்னல் உயரத்துக்கு ஏறி நிற்பரோ அவருக்கு கேட்பரிஸ் சாக்லேட் . குழந்தைகள் மளமளவென எத்தனித்து ஏறும் அழகை ரசிக்கலானோம் ;இதில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி உற்சாகப் படுத்துதல் வேறு. அப்பொழுது தான் ஒரு ஆண் குழந்தை தனக்கு சற்று முன்னே ஏறி நின்றிருந்த பெண் குழந்தை ஒன்றின் கால்களை ஏறவிடாது இழுத்துவிடுவதை அறிந்தோம் .இப்பொழுது நமக்கு எதையும் புரிந்து கொள்ளும் வயதல்லவா ? புரிந்துகொண்டோம் . குழந்தைக்கு யார் இந்த யோசனையை சொல்வர்? சொன்னாலும் புரிந்து கொள்ளும் வயதா குழந்தைக்கு ? விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம் .இங்கு என் ஆசிரியர் விளையும் பருவம் முளையிலே என்றது இப்பொழுது சரியாகப் புரிந்தது .
மற்றும் ஒரு பருவம் பற்றியது மறுமுறை வரும்.
வணக்கத்துடன் ,
கோதைதனபாலன்
No comments:
Post a Comment