கோயில் உண்டியலில்
இடும் காணிக்கை
தெய்வத்திற்கு லஞ்சமன்று
கோயிலுக்கு நமது வருமானம்
கருவறையில் கால் கடுத்திருக்க
ஆராதனை காட்டாது
தட்டில் எடு பிரசாதம் என்றவர்
தீபத் தட்டில் வந்தவர்
பணம் ஐம்பது விழ
கணநேரத்தில் தீபாராதனை
முந்தி வந்தவர் ,பிந்தி வந்தவர்
மனம் ஒன்றிய பிரார்த்தனை
இங்கு ஐம்பது, தெய்வ லஞ்சமா
பக்தியில் கரைந்த மாயம் யாதோ
மறைந்துள்ள பொருள் என்னவோ
பகர்வாய் நன் நெஞ்சே !
No comments:
Post a Comment