Wednesday, 31 August 2011

பக்தியில் கரையும் லஞ்சம்

கோயில் உண்டியலில்  
இடும் காணிக்கை  
தெய்வத்திற்கு லஞ்சமன்று  
கோயிலுக்கு நமது  வருமானம்  
கருவறையில் கால் கடுத்திருக்க  
ஆராதனை காட்டாது 
தட்டில் எடு பிரசாதம் என்றவர்  
தீபத் தட்டில் வந்தவர்    
பணம் ஐம்பது விழ  
கணநேரத்தில் தீபாராதனை  
முந்தி வந்தவர் ,பிந்தி வந்தவர்    
மனம் ஒன்றிய பிரார்த்தனை  
இங்கு ஐம்பது, தெய்வ லஞ்சமா   
பக்தியில் கரைந்த மாயம் யாதோ 
மறைந்துள்ள பொருள் என்னவோ  
பகர்வாய் நன் நெஞ்சே !


Sunday, 28 August 2011

பேஸ் புக்

 ஓய்ந்த வயதென்று  
 பாமர மக்களிடை ஒளியத் துவங்க  
 சுருங்கி ஒழிந்திடுமோ 
 யான் கற்ற அறிவு 
 மலைத்தது மனது, வந்தது  
 வானில் ஒரு விடியல்   
முகம் கா ட்டியது ப்பேஸ் புக்காக  
அறிவென்ற ஓடை ஆறு ஆகிறது....... ! .  

உழவன் கையறு நிலை

விளைய வைக்க விழைந்தால்
விளைந்த நெல்லுக்கு விலையில்லை
உழைப்பின் சுவை பறிபோக
தொலைகிறது மண் வாசனை. -இதை
தடுப்பாரும்இல்லை
மாற்றுவாரும் இல்லை
மாற்றி மனை பல காட்டி
பண ஆசை திரட்டி
நெல் வயல் 
 பையில் போடுமுன் பறிபோக
பின் தொடரும் தரகர் கோடி
இது உனக்கு நன்றாமோ.?
சிந்தி !, நிலத்தை சிந்தாதே .


' ஊருக்கு உழைப்பவன் உழவனே !




Saturday, 27 August 2011

தமிழ் கவிதைகள்

சிந்தனை செருக்கில்
எண்ணங்கள் குவியலாக
அவற்றை வடிக்க 
வார்த்தைகள் தேடினேன் 
பல மொழிகளில்
தஞ்சமடைந்தேன் தமிழை .

தமிழ்பாவலர்  பாரதிதாசனுக்கு     
சமர்ப்பணம்




வாழிய செந்தமிழ் , வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு !
வந்தேமாதரம் ! வந்தேமாதரம் !!